அனந்த விரதம், கதளீ கெளரீ விரதம்: நடராஜர், சிவன், விஷ்ணுவை வழிபட மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்!
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பவுர்ணமிக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி திதி சிறப்பானது சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும். சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள்.
கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். சிவன் பார்வதிக்கு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அனந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். இன்று சிவாலயங்களில் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல், அம்மனுக்கு பூமாலையும், பெருமாளுக்கு துளசி மாலையும் சாத்தி வழிபடுதல் சிறந்த பலனைத்தரும்.