உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  மாதர்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

 மாதர்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, தேர்வாய் கிராமத்தில் பழமைவாய்ந்த அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக நேற்று, அங்கு கோவில் முகப்பு மண்டபம் கட்ட, பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 6 அடி ஆழத்தில், உலோகத்தாலான பொருட்கள் இருப்பதை கிராம மக்கள் கண்டனர். மண்ணில் புதைந்து கிடந்தவற்றை, ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து பார்த்தபோது, நம்மாழ்வார், நடராஜர், இரண்டு அம்மன் சிலைகள் மற்றும் சூலம் என்பது தெரிந்தது. அவை, மிகவும் பழமையானதாக இருந்தன. தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் பாலாஜி அங்கு சென்று, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை கிராம மக்களிடம் இருந்து பெற்று, கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைத்தார். தாசில்தார் பாலாஜி கூறுகையில், ‘‘கண்டெடுக்கப்பட்டவை கற்சிலைகள் அல்ல; ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம். தொல்லியல் துறை ஆய்விற்கு பின்தான் இதுகுறித்து தெரிய வரும். ‘‘திருப்பணிகள் முடிந்ததும், இந்த கோவிலுக்கே சிலைகள் ஒப்படைக்கப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !