பொறுமையாக இருக்க சொல்கிறார்: சாரதா தேவியார்
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை.
* கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.
* உலகம் கடவுளுக்கு சொந்தமானது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே.
* பகலும் இரவும் சேரும் நேரம் வழிபாட்டிற்கு ஏற்ற நேரம்.
* எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் ஜபம் செய்.
* துாய மனம் கொண்டவர்கள் அனைத்தையும் துாய்மையாகவே காண்பர்.
* முன்பு செய்த வினைப்படியே துன்பம் வருகிறது. அதை தாங்கிக் கொள்.
* நல்ல செயல்களை செய்வதன் மூலம் தீவினை கழியும்.
* கருணை, இரக்கம் இல்லாதவனை மனிதன் என சொல்ல முடியாது.
* மனிதப்பிறவியில் சுகம் என்பது இல்லவே இல்லை.
* ஒருவருடைய கர்மபலன் முடிவடைந்ததும் கடவுளின் காட்சி கிடைக்கும்.
* கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய்.
* உன் விருப்பத்தை கடவுளிடம் சொல். நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் பார்த்துக் கொள்வார்.
* சாதிக்க முடியாததையும் பக்தி மூலம் சாதிக்கலாம்.
* தீய எண்ணம் இருக்கும் வரை மனதில் அமைதி இருக்காது.
* தகுதி இல்லாமல் ஆசைப்படாதே. அது உன் மனதை அலைக்கழிக்கும்.