உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயில் நான்காம் ஆண்டு விழா

வரசித்தி விநாயகர் கோயில் நான்காம் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் நான்காம் ஆண்டு விழா மற்றும் வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


விழாவையொட்டி, காலை, 7.00 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சிவ வாத்தியங்களுடன், 108 பால் குடங்கள் எடுத்து வருதல், திருமஞ்சனம், மகா அபிஷேகம், திருக்குட நீர் அபிஷேகம், அலங்கார பூஜை, திருநீறு வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 8.00 மணிக்கு, 18 வகையான மூலிகையில் அபிஷேகம், 11.00 மணிக்கு அனைத்து தெய்வங்களும் வெள்ளிக்கலசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 12.00 மணிக்கு மகா கைலாய வாத்திய முழக்கம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம், மாலை, 5.00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மாலை திருவீதி உலா, வான வேடிக்கை, மங்கல இசை மற்றும் சிவ வாத்திய முழக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !