பெரிய பனையூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :11 minutes ago
மேலுார்: அட்டப்பட்டி பெரிய பனையூர் அய்யனார் கோயில் புரட்டாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. அம்பலகாரன் பட்டியில் இருந்து மக்கள் புரவியை சுமந்து 5 கி.மீ., தொலைவில் அட்டப்பட்டியில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு தங்கள் வீடுகளில் வளர்க்கும் காளைகளை கோயிலுக்கு கொண்டு சென்று சுவாமி கும்பிடும் எருது கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அட்டப்பட்டி, தும்பை பட்டி கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.