நல்லதைச் செய் நல்லதே நடக்கும்: ராஜாஜி
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும்.
* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.
* சிறிய செயல் செய்பவரை பார்த்து நீ சிரித்தால் கடவுள் உன்னை பார்த்து சிரிப்பார்.
* வாழ்வின் உயிர்நாடியான நீதியை காப்பது உன் கடமை.
* தவறான செயலை செய்து விட்டு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே இதற்கு தீர்வு.
* கடவுளை வழிபட்டால் உயர்ந்த நிலையை அடைவாய்.
* உன் தகுதியை வளர்த்துக் கொள். அதில் சமரசம் செய்யாதே.
* உயிர் வாழ உணவு அவசியம். அது போல சுதந்திரமாக வாழ தியாகம் அவசியம்.
* அனைவரிடமும் அன்பு காட்டுவதே தர்மத்தில் சிறந்தது.
* மனம் பலவீனமாக இருந்தால் தீய சிந்தனை தோன்றும்.
* பிறருக்கு உதவி செய்தால் அளப்பரிய சக்தி பெறுவாய்.
* மனம் கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திரு.
* எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே. அதனால் மனவலிமை குறையும்.
* கல்வி கற்றால் அறிவு வளர்வதோடு நற்பண்புடன் வாழலாம்.
* கோபப்படாதே... அது உன் முகத்தின் அழகை கெடுக்கும்.
* தீய எண்ணம் தோன்றும் போதே அதை கிள்ளி எறிந்திடு.