உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 8 ஆண்டுகளுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு அசாமிலிருந்து யானை வந்தது

8 ஆண்டுகளுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு அசாமிலிருந்து யானை வந்தது

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர்  கோவிலிற்கு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்,  அசாம் மாநிலத்தில் இருந்து ஆண் யானை  நேற்று இரவு  வந்தது. கோவில் நிர்வாகம் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் திரண்டு உற்சாகமுடன் வரவேற்பு அளித்தனர்.  


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கோவிலில் திருவிழா காலங்களில் கம்பீரமாக மாட வீதிகளில் சுவாமி வீதி உலாவின்போது முன்னால் யானை வலம் வரவும், கோவிலிற்கு வரும் பக்தர்களை ஆசீர்வதிதிக்க  யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இதில்,  கடந்த, 1995ம் ஆண்டு முதல் கடந்த, 2018ம் ஆண்டு  வரை, 23 ஆண்டுகள் ருக்கு  என்ற யானை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து வந்த நிலையில், கடந்த, 2018 மார்ச் 22ம் தேதி இரவு கோவில் வளாகத்தில் உடல் நலக்குறைவு  ஏற்பட்டு உயிரிழந்தது. இதையடுத்து, கோவில்களுக்கு யானை வாங்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு, 9:30 மணி அளவில்,  அசாம் மாநிலத்திலிருந்து, 8 வயதுடைய, 6 அடி உயரம் கொண்டா ஹீராலால் என்ற ஆண் யானை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் முன்பு லாரி மூலம் வந்தது.  அப்போது, யானைக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் தீபாரதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்து மலர் துாவி வரவேற்றனர். புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !