உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் நிறைவை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடந்தது.

செப். 15ல் கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவ விழா துவங்கியது. தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளலும்,மாலையில் வீதியுலாவும் நடந்தது.செப்.23ல் செப்பு தேரோட்டம் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு கோபால விலாசத்தில் புஷ்பயாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூதேவியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !