கணபதிபாளையம் சவுடாம்பிகை கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :1 days ago
பல்லடம்: பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த செப். 17-ம் தேதி விமரிசையாக நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. மண்டல பூஜையின் 15-ம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் சவுடாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் கமிட்டி சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கணபதிபாளையம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தனார் சிவ தொண்டர் படை நிர்வாகிகள் முன்னாள் பி.டி.ஓ., திருமால், ஜெயக்குமார், சூரியாராஜன், கோகுல், தேவா ஆகியோர் செய்திருந்தனர்.