உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு; ராஜஅலங்காரத்தில் சிங்கவரம் ரங்கநாதர்

செஞ்சி கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு; ராஜஅலங்காரத்தில் சிங்கவரம் ரங்கநாதர்

செஞ்சி: செஞ்சி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ராஜஅலங்காரமும் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாள், தாயாரம்மாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. வெங்கடேசபெருமாள் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தார். மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வெங்கரட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்காரமும் செய்தனர். பஜனை கோஷ்டியினரின் பஜனைய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !