புரட்டாசி சனிவார விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :14 hours ago
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு போடி அருகே சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்டநாதர் அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், விசுவாசபுரம் வேங்கட வரதராஜ பெருமாள், உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.