உளுந்துார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி தேரோட்டம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேரோட்டம் மற்றும் அலகு குத்தும் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் அலகு குத்தும் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கும் செடல் அணிந்தும், அலகு குத்தியும், தேருக்கு அடியில் படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், குழந்தைகளின் எடைக்கு எடை பணம் வழங்கி துலாபாரம் செலுத்தியும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவில், திரளான பக்தர்கள் தேர்வடம் பிடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.