உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் வழிபாட்டில் கோவிந்தா நாமம் எப்படி வந்தது தெரியுமா?

பெருமாள் வழிபாட்டில் கோவிந்தா நாமம் எப்படி வந்தது தெரியுமா?

இந்த கலியுகத்தில் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாசனாக பூலோகத்தில் அவதரித்தபோது, ஒருமுறை அவர் ஒரு பசுவை தானமாக பெற அகத்திய முனிவர் ஆசிரமத்திற்குச் சென்றார். தம்பதியராக வராததால் பெருமாளுக்குப் பசுவைத் தர மறுத்து விட்டார் அகத்தியர். பெருமாள் தன் மனைவியான பத்மாவதி தாயாருடன் அடுத்த நாள் ஆசிரமத்திற்குச் சென்றார். அகத்தியர் அப்பொழுது அங்கு இல்லை. ஏமாற்றத்துடன் பெருமாள் திரும்பி சென்றார். இதை அறிந்த அகத்திய முனிவர், சுவாமி இந்தப் பசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோவு இண்டா... என்று கூறியபடி சென்று பெருமாளிடம் பசுவை கொடுத்தார். கோ" என்றால் பசு. அகத்திய முனிவர் இவ்வாறு "கோ இண்டா.விரைவாக அழைத்தது பக்தியால் கோவிந்தா என்று மாறியது.  இந்த கோவிந்தா திருநாமத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்குக் கலியுகத்தில் முக்தி அளிப்பதாக பெருமாள் வரம் அளித்தார். இதனால் தான் பெருமாள் வழிபாட்டில்  கோவிந்தா நாமம் முக்கிய இடம் பெறுகிறது.


ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் திருமாலின் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கோவிந்தா என்னும் திருநாமம். இந்த திருநாமத்தின் சிறப்பு, இது மோட்சத்தினை தரும் திருநாமம் என்பதாம். கோவிந்தா என்று அழைத்தவன் மீண்டும் இப்பூவுலகம் திரும்ப மாட்டான் என்பது பூர்வாச்சாரியர்கள் மற்றும் பெரியவர்கள் கூற்று. கோவிந்தா என்னும் நாமத்தினை ஏமாற்றத்தின் அடையாளமாக எண்ணி கிண்டல் செய்து பாபத்தினை சேகரித்துக் கொள்வதை தவிர்ப்போமாக. கோவிந்தனான கிருஷ்ணனை அவனது நாமாவான “கோவிந்தா” வால் துதித்து பயனுறுவோம், இன்புறுவோம். கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா! கோவிந்தா.. கோவிந்தா என்னும் அவன் நாமம் சொல்வோம் பாபம் நீங்கி மோட்சம் பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !