உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்

சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்

திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மருக்கு 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


பழமையான இக்கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக மூலவர், பிரகார தெய்வங்களுக்கு நடந்து வருகின்றன. தினமும் மாலையில் தங்தத்தேர் புறப்பாடு நடக்கிறது. நேற்று கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், தயிர், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, தேன், நெய், பழச்சாறு, இளநீர், நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்பாபிஷேகத்திற்கு பின் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய லட்சுமி நரசிம்மரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப் பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !