உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு அபிஷேகம்

களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்: களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில் நேற்று, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. காங்சிபுரம் அருகே உள்ள களக்காட்டூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுயம்பு மூர்த்தியாக அக்னீஸ்வர பெருமான் அருள்பாலிக்கிறார். உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், இன்று காலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அக்னீஸ்வர பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !