சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழா; அக்.11 முதல் துவக்கம்
ADDED :8 hours ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழா, அக்.1 முதல் துவங்குகிறது.
இதனை முன்னிட்டு அக்.11 காலை 5:00 மணிக்கு மேல் ஆனந்த வள்ளி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. அன்று முதல் அக்.20 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அக்.19 இரவு சரஸ்வதி பூஜை, அக்.20 பகலில் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் ஆனந்த் வள்ளி அம்மன் எழுந்தருளலும், அம்பு போடும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.