காவலும் கணக்கும்
ADDED :18 hours ago
சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் இருக்கும் இவரைக் ‘காவல் தெய்வம்’ என்றும் சொல்வர். கோயில் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதும், சிவ வழிபாட்டிற்கு இடையூறு வராமல் தடுப்பதும் இவரது பணி. கோயிலின் காவல்காரராக இருப்பவர் பைரவர். இவருக்கு ‘ஷேத்திரபாலகன்’ என்றும் பெயருண்டு. ‘கோயிலை பாதுகாப்பவர்’ என்பது இதன் பொருள்.