உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் நமோ நாராயணா

ஓம் நமோ நாராயணா

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் பெருமாள் கோயில்களில் வரிசையாக பாடுவது மரபு. இதற்கு காரணம் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் விளக்கம். மதுரகவியாழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு  என்பது ‘நமோ’ என்பதைக் குறிக்கும்.

ஆண்டாளின் திருப்பாவை ‘நாராயணாய’ என்பதன் விளக்கமாக உள்ளது. இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் பாடினால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் எட்டெழுத்து மகாமந்திரத்தை சொன்னதாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !