புரந்ததாஸர் ஆராதனை விழா
ADDED :4630 days ago
ஈரோடு: ஈரோடு காவிரிக்கரை ராகவேந்திரா சுவாமி கோவிலில் உள்ள பரிமள மண்டபத்தில், புரந்ததாஸர் ஆராதனை விழா, நடக்க உள்ளது. அன்று காலை, 8 மணிக்கு தாஸர் சீனிவாசன் தலைமையில், ஸ்ரீபாதராஜ பஜனை மண்டலியின், 108 நாமசங்கீத கீர்த்தனைகள் பாட உள்ளனர். மேலும், பல்வேறு பஜனை குழுக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, புரந்ததாஸர் பாடல்களை பாடுகின்றனர். ஏற்பாடுகளை அசோக் ஆனந்த், குமார், ராகவேந்திரன் ஆகியோர் செய்தனர்.