உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குறைந்து வரும் மயில்கள்!

பழநியில் குறைந்து வரும் மயில்கள்!

பழநி: பழநி, மலைக்கோயிலில் உள்ள பாதுகாப்பற்ற சூழலால், மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பழநி மலைக்கோயிலில், மயில், மலைப்பாம்பு, குரங்கு மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இவற்றில், மயில்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், அவற்றின் முட்டைகளையும், சிறிய மயில்களையும் மலைப்பாம்புகள் உணவாக்கிக் கொள்கின்றன. மேலும், கடைக்காரர்களாலும், சில பக்தர்களாலும் மயில்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இவற்றை பாதுகாப்பதில், வனத்துறை நிர்வாகத்தினர், ஆர்வமும் காட்டுவதில்லை. மேலும், வறட்சியால் இனப்பெருக்கத்திற்குரிய, இதமான சூழல் இல்லாததாலும், பழநி மலைக்கோயிலில் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ரேஞ்சர் கணேசன் கூறுகையில், ""பொதுவாக பறவைகள், விலங்குகளை துன்புறுத்தக் கூடாது. மயில்களை தாக்குவதும், வேட்டையாடுவதும் குற்றமாகும். மலைக்கோயிலில் மயில்கள் நிறைய உள்ளன. அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !