உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மஸ்த கும்பமேளா: ஒரே நேரத்தில் 501 பேர் சங்கு ஊதி உலக சாதனை! கின்னஸ் பட்டியலில் நாசிக்!!

சிம்மஸ்த கும்பமேளா: ஒரே நேரத்தில் 501 பேர் சங்கு ஊதி உலக சாதனை! கின்னஸ் பட்டியலில் நாசிக்!!

மகாராஷ்டிரா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிம்மஸ்த கும்பமேளாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் சங்கு ஊதியதற்காக புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.


நாசிக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 501 பேர் ஒரே நேரத்தில் சங்கு ஊதி சாதனை படைத்தனர். இதற்கு முன்பு 303 பேர் ஒரே நேரத்தில் சங்கு ஊதியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து நாசிக் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.


கின்னஸ் சான்றிதழ் : இந்தச் சாதனையை உறுதிப்படுத்திய கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரி, பங்கேற்பாளர்களைப் பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரே நேரத்தில் அதிகமானோர் சங்கு ஊதியதற்கான இந்தச் சாதனை சிறப்பானது. முந்தைய சாதனையான 303 பேரைத் தாண்டி, தற்போது 501 பேர் சங்கு ஊதியுள்ளனர். நாசிக் மக்களின் இந்தச் சாதனை பாராட்டுக்குரியது. அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார். சிம்மஸ்த கும்பமேளாவை முன்னிட்டு நாசிக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நகரின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் மக்களின் ஒன்றுபட்ட பங்கேற்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !