உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கத்தை சுற்றி நின்ற நாக பாம்பு

அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கத்தை சுற்றி நின்ற நாக பாம்பு

கடலுார்: கடலுார் அருகே கோவிலில் சிவலிங்கம் மீது நாக பாம்பு சுற்றியிருந்ததால் பரபரப்பு நிலவியது.


கடலுார், மேல்பட்டாம்பாக்கம் அடுத்த அகரத்தில் திரிபுர சுந்தரி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, அன்னாபிஷேகத்தையொட்டி நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மூலவர் சிவலிங்கம் மீது மூன்றடி நீள நாக பாம்பு சுற்றியிருந்ததை கண்டு அர்ச்சகர் அதிர்ச்சியடைந்தார். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், மூன்றடி நீள நாகபாம்பை லாவகமாக பிடித்துச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !