காஞ்சி வன்னீஸ்வரருக்கு நாகாபரணம் நால்வர் நற்பணி குழுவினர் காணிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒ.பி.குளக்கரையில் உள்ள வன்னீஸ்வரர் கோவிலுக்கு, ஐம்பொன்னால் புதிதாக செய்யப்பட்ட நாகாபரணம் மற்றும் அண்ணாமலையார் கிரீடத்தை நால்வர் நற்பணி குழுவினர் நேற்று காணிக்கையாக வழங்கி சுவாமிக்கு அணிவித்தனர்.
காஞ்சிபுரத்தில், 2023ல், நால்வர் நற்பணி குழு துவக்கப்பட்டது. இக்குழுவில் 100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர் மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், பராமரிப்பு இல்லாத சிவன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இக்குழு சார்பில், காஞ்சிபுரம் ஒ.பி.குளக்கரையில் உள்ள வன்னீஸ்வரரர் கோவில் கடந்த மார்ச் மாதம் துாய்மை பணி மேற்கெண்டனர். அப்போது சுவாமிக்கு நாகாபரணத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி 5.5 அடி உயரமும், 2.5 அடி அகலத்தில், ஐம்பொன்னால் புதிதாக நாகாபாரணமும், ஒரு அடி உயரத்தில், அண்ணமாலையார் கிரீடமும் புதிதாக தயார் செய்து நேற்று காணிக்கையாக வழங்கி சுவாமிக்கு அணிவித்தனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வன்னீஸ்வரர், காணிக்கையாக வழங்கப்பட்ட புதிய நாகாபரணம் மற்றும் அண்ணாமலையார் கிரீடத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்