உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம்: காஞ்சி மஹாபெரியவர்

வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம்: காஞ்சி மஹாபெரியவர்

* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும்.
* தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன்.  
* பேராசையால் செய்யும் செயல் பாவத்தில் தள்ளிவிடும்.
* எந்த செயலை செய்தாலும் அக்கறையுடன் செய்.
* போட்டி மனப்பான்மையை கைவிடு. மனம் அமைதி பெறும்.   
* குழந்தையின் மனதில் பக்தியை விதைத்தால் அது முளைவிடும்.
* இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களில் ஈடுபடு.  
* மனசாட்சியின்படி நட. அதுவே சிறந்தது.  
* உன் வாழ்க்கைக்கு அடிப்படை தர்மம்.  
* எல்லோரது உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார்.
* கடவுள் நாமத்தை சொல். நிம்மதி வரும்.
* பேச்சில் கவனமாக இருந்தால் பிரச்னை வராது.
* அறிவு, அழகு, செல்வம் என உன்னிடம் எது இருந்தாலும், அதை நினைத்து கர்வப்படாதே.  
* நீ செய்த தர்மம் இக்கட்டான நேரத்திலும் கைகொடுக்கும்.
* பிறருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், அந்த தகுதி உனக்கு உள்ளதா என யோசி.
* எதுவும் உன் கையில் இல்லை. எல்லாம் கடவுளின் செயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !