உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை வழிபட மனக்கவலைகள் யாவும் நீங்கும் மகிழ்ச்சி நிலைக்கும்!

சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை வழிபட மனக்கவலைகள் யாவும் நீங்கும் மகிழ்ச்சி நிலைக்கும்!

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் விநாயகா என்றாலே தடைகள் யாவும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும்.


நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும்.  வீட்டில் விளக்கேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் மாலையும் கொழுக்கட்டையும் படைத்து வழிபட சங்கடம் யாவும் நீங்கும். இன்று விரதம் இருந்து கணபதியை தியானிப்போம்.. சகல நலமும் வளமும் பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !