உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீயும் தெய்வமாவது எப்படி விளக்கமளிக்கிறார் சிவானந்தர்

நீயும் தெய்வமாவது எப்படி விளக்கமளிக்கிறார் சிவானந்தர்

* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   
* ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை செய்யாதே.
* நல்லவரின் நட்பும், நல்ல நுால்களும் உலகமாகிய கடலை தாண்ட உதவும்.
* உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசமாக்கு.
* சத்தியம், நியாயம், விவேகத்துடன் செயல்படு.  
* கட்டுப்பாடு இருந்தால் தான் லட்சியத்தை அடைவாய்.
* நல்ல கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இரு.  
* எந்த நிலையில் நீ இருந்தாலும் அதற்காக கவலைப்படாதே.
* மனத்துாய்மை இருந்தால் கடவுளை அடையலாம்.
* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, தவம் ஆகியவை ஆன்மிகத்தின் முதுகெலும்பு.
* நல்ல குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.
* பெயர், புகழ், பணம் போன்ற ஆசைகளை விடு. உண்மையான அன்பை உணர்வாய்.
* கருணையே உயர்வான குணம்; குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி.
* மனஅமைதி கொண்டோரிடம் ஆனந்தம் நிறைந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !