உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம்

காரைக்குடி சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது.


காரைக்குடி செக்காலையில் உள்ள ஸ்ரீ சங்கர மணிமண்டபத்தில் 15வது ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் கலைமாமணி கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவத மக்கள் சார்பில் அஷ்டபதி பஜனை, திவ்யநாம பஜனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை உஞ்சவிருத்தி பஜனையும் மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சந்திரசேகர், சிவக்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !