உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லனூர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

செல்லனூர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

அன்னூர்: செல்லனூர் சக்தி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.


செல்லனூரில், 200 ஆண்டுகள் பழமையான சக்தி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த 28ம் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 30ம் தேதி முளைப்பாரி மற்றும் தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. இரவு கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் கம்பத்தாட்டம் நடந்தது.  நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும் இரவு மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வெள்ளி விநாயகர், சக்தி மாரியம்மன் மாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கும், விமானங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது, மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !