சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :11 hours ago
கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நடந்த உச்சிகால பூஜையில் மூலவர் பாலேஸ்வரருக்கும் பலாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பங்கு பெற்ற வாழைப்பூ கலச பூஜையும்,நேர்த்திக்கடன் வழிபாடும் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி, விழுப்புரம்,கண்டாச்சிபுரம்,சூரப்பட்டு, கெடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகி சம்பத்,அர்ச்சகர் கோபி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.