உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனககிரி வேலாயுத சுவாமி கோவில் கோவிலில் கந்தர் சஷ்டி விழா துவக்கம்

கனககிரி வேலாயுத சுவாமி கோவில் கோவிலில் கந்தர் சஷ்டி விழா துவக்கம்

பொங்கலூர்: பொங்கலூர் குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் எட்டாம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா இன்று காலை, 6:15 மணிக்கு மகா கணபதி யாக பூஜையுடன் துவங்கியது. சுவாமிக்கு அபிஷேக பூஜை, காப்பு கட்டுதல், சிறப்பு கந்தர் சஷ்டி பாராயணம் நடந்தது. பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதம் துவக்கினர். தொடர்ந்து நாளை முதல் சிறப்பு அபிஷேகம், கந்தர் சஷ்டி பாராயணம் நடக்கிறது. வரும் நவ., 15 ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:00 மணிக்கு பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்குதல், பின் மலை கிரிவல பாதையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. விபூதி பிரசாதம், வாழைத்தண்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. நவ., 16 திங்கட்கிழமை காலை, 7:00 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது. காலை, 9.30 மணிக்கு திருக்கல்யாணம், மதியம் மகாதீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !