மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
பல்லடம்: மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழாவுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கொடியேற்று விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி ஆகியவை இன்று நடந்தன. முன்னதாக, காலை, 4:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, காலை, 6.00 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கொடியேற்று விழாவை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்து கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். நவ., 15 அன்று சூரசம்ஹார நிகழ்ச்சியும், இதையடுத்து, மறுநாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.