உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிர்காலத்திற்காக கேதார்நாத் கோயில் நடை அடைப்பு! உகிமத் செல்லத் தயாராகும் உற்சவ மூர்த்தி!

குளிர்காலத்திற்காக கேதார்நாத் கோயில் நடை அடைப்பு! உகிமத் செல்லத் தயாராகும் உற்சவ மூர்த்தி!

ருத்ரபிரயாக்,  உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில், பாபா கேதார்நாதரின் உற்சவப் பல்லக்கு (உத்சவ டோலி) இன்று பண்டார கிரகத்தில் இருந்து கோயில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாரம்பரிய முறைப்படி, இன்று இரவு கோயிலின் கருவறையில் உற்சவ டோலி தங்க வைக்கப்படும். நாளை வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் கேதார்நாத் கோயில் நடை குளிர்காலத்திற்காக மூடப்பட உள்ளது. இதன் மூலம் ஆறு மாத கால கோடைக்கால கேதார்நாத் யாத்திரை நிறைவடைகிறது. தொடர்ந்து, பாபா கேதார்நாதரின் உற்சவ டோலி, குளிர்கால வழிபாட்டிற்காக உத்தராகண்டின் உகிமத் பகுதிக்குப் புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !