உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பக்த சமாஜம் திருப்பதி பாதயாத்திரை

திருமலை பக்த சமாஜம் திருப்பதி பாதயாத்திரை

விழுப்புரம்: திருமலை வெங்கடாஜலபதி பாதயாத்திரை பக்த சமாஜம் சார்பில் நிர்வாகிகள் 20ம் ஆண்டு திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலிலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்ட இந்த பேரணியை பக்த சமாஜம் தலைவர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். செயலாளர் மணி, பொருளாளர் ஞானதேசிகன் ஆகியோர் தலைமையில் 210 பேர் பாதயாத்திரை புறப்பட்டனர். இக்குழுவினர் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக வரும் 16ம் தேதி திருப்பதி சென்றடைந்து, ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !