உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கப்படுமா!

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கப்படுமா!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் துவக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டு, "பித்தா என அடியெடுத்துக் கொடுக்க சுந்தரர் முதன்முதலில் தேவாரம் பாடிய சிறப்புடையது. சிவபெருமானுக்கும், சுந்தரருக்கும் நேரடி வழக்கு நடந்த ஊர் என்பதால் பல வெளியூர் பக்தர்கள் தினமும் இங்கு வந்து சிவனை தரிசித்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வெளியூர் மட்டுமில்லாது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். எனவே பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு இக்கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை துவக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !