திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்
ADDED :32 minutes ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவர். விழா பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் நேற்று அருணாசலேஸ்வரர்கோவிலில் ஆய்வு செய்தார். டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், ‘‘போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீப விழா பாதுகாப்பு பணியில், 5 டி.ஐ.ஜி.,கள் 42, எஸ்.பி., க்கள் உள்ளிட்ட, 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவிலினுள் பரணி தீபத்திற்கு, 5,000 பேர், மஹா தீபத்திற்கு, 8,000 பேர் அனுமதிக்கப்படுவர்,’’ என்றார்.