திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்!
ADDED :4624 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த பிப்.7ம் தேதி பூ அலங்காரத்துடன் துவங்கியது. பிப்.8ல் பூச்சொரிதலும், பிப்.10ல் சாட்டுதலும் நடந்தது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. நேர்த்திகடனாக தீச்சட்டி எடுப்பவர்கள், பூக்குழி இறங்குபவர்கள், பால்குடம் எடுப்பவர்கள், காப்புக்கட்டிக் கொண்டனர். நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.