கந்தசஷ்டி விழா பால்குடம் ஊர்வலம்
ADDED :19 minutes ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடந்தது. முன்னதாக நடந்த பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிேஷகம் நடத்தபட்டு, வள்ளி, தெய்வானையுடன் முருகன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டார். பக்தர்கள் கந்தசஷ்டி பாடல்களை பாடினர். மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. முருகபெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.