உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘அரோகரா அரோகரா’, ‘வெற்றிவேல் வீரவேல்’ என, கோஷம் எழுப்பினர். கந்தசஷ்டி விழாவின், ஏழாம் நாளான இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !