காஞ்சிபுரம் வரதர் கோவிலில் சேனை முதலியார் அவதார உத்சவம்
ADDED :14 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் தளபதியாக இருந்த வந்த சேனை முதலியாரின் அவதார உத்சவம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் தளபதியாக இருந்தவர் சேனை முதலியார். இவரது அவதார உத்சவம் ஐப்பசி மாதம் பூராடம் நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேனை முதலியாரின் அவதார உத்சவத்தையொட்டி கோவிலின் கண்ணாடி அறையிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் மற்றும் சேனை முதலியார் ஆகியோர் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வரை சென்று மீண்டும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
பின், சேனை முதலியாருக்கு பரிவட்டம் மற்றும் மாலை மரியாதைகள் வழங்கப்பட்டன. உற்சவர் வரதராஜப் பெருமாளுக்கும் சேனை முதலியாருக்கும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.