உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பணிகள் ஜரூர் நவ., 22 ல் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பணிகள் ஜரூர் நவ., 22 ல் மகா கும்பாபிஷேகம்

ஊட்டி: ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் மகா கும்பாபிஷேகம், இம்மாதம், 22ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு, 20ம் தேதி பகல் 2:00 மணி முதல், இரவு, 8:00 மணிவரை, அனுக்ஞை ஆசார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், ஹோம், திவ்ய பிரபந்த வேத போராயணம், பூர்ணாகுதி மற்றும் திருவாராதனம் சாற்று முறை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

21ம் தேதி காலை, 8:00 மணி முதல், 12:00 மணிவரை, திருப்பள்ளி எழுச்சி, அலங்கார திருமஞ்சனம் மற்றும் பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளல் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முக்கிய திருவிழா நாளான, 22ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஐயனுக்கு அலங்காரம், திருவாராதனம், மங்கள ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகத்தை அடுத்து, பகல், 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை, 6:00 மணிக்கு, திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ தாச பளஞ்சிக ஸ்ரீ ராமானுஜ பக்த ஜன சபையார், மாதர், இளைஞர், மழலையர் மற்றும் பூவையர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !