உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,000 ஆண்டு பழமைவாய்ந்தகோவிலில் திருவிளக்கு பூஜை

1,000 ஆண்டு பழமைவாய்ந்தகோவிலில் திருவிளக்கு பூஜை

துறையூர்: ஆலத்துடையான்பட்டியிலுள்ள, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சோமநாதேஸ்வரர் கோவிலில், உலக மக்கள் நலன் கருதியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் சிறப்பு அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் திரிபுவன சக்கரவர்த்தி என்ற மன்னன் கி.மு., 300 ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலையில் உள்ள கோமசுந்தரேஸ்வரர் கோவிலில், குழந்தை வரம் வேண்டி பூஜை செய்தபோது, சிவனே நேரில் தோன்றி, தான் பெருநாவலூர் எனும் ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் உள்ளதாகவும், அங்கு கோவில் அமைக்க இறைவன் கட்டளையிட்டதாகவும், அதன் பேரில் திரிபுவன சக்கரவர்த்தி ஆலத்துடையான்பட்டியில் உள்ள வன பகுதியில் கோவில் அமைத்தாகவும் கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலில் மழை வேண்டியும், உலக மக்களின் நலன் கருதியும், சிறப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் உப்பிலியபுரம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் செல்வராஜ், யூனியன் தலைவர் லலிதா, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தி, ரெட்டியார்பட்டி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா, இளங்கோவன், ஆலத்துடையான்பட்டி ராஜசேகரன் உட்பட, பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகவான் காமராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !