உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீப கொப்பரை

2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீப கொப்பரை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார்  மலையில்  இன்று  ஏற்றப்படும் மகாதீபம்  ராட்சத கொப்பரை இன்று மலை உச்சிக்கு கொண்டு செல்லபட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாளான இன்று காலை   உற்சவத்தில், மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்)  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  மகா தீபத்திற்கு பயன்படுத்தும் மகா ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு செல்லபட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை, 24ல், பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !