உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா துவக்கம்

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா இன்று துவங்கிய நிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கார்த்திகை மாத பவுர்ணமி செவ்வாய்க்கிழமையான இன்று முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா துவங்கியது. இதன்படி மூலவருக்கு தினம் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்படும். அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் விழா துவக்கப்படுகிறது. 8 நாட்கள் வரை நடக்கும் இந்த விழா நிகழ்வின் போது பக்தர்கள் பொங்கல் வைத்தல், முடி இறக்குதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கும்ப ஸ்தாபனம், துர்கா ஹோமம், சிறப்பு அலங்காரம் நடக்க உள்ளது. டிச., 1 செவ்வாய் அன்று பெரும் படையல் நடத்தப்பட்டு விழா நிறைவடையும். அன்று இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !