திருமங்கையாழ்வார் குருபூஜை வழிபாடு
ADDED :11 minutes ago
திருப்பூர்: ஸ்ரீதிருமங்கையாழ்வார் திருநட்சத்திர குருபூஜை விழா வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஸ்ரீதிருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி, திருமங்கையாழ்வார் மூலவருக்கு சிறப்பு அபி ஷே கம் , உற்சவர் சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.