உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி கரையில் கசாப்பு கடை: புனிதநீராடும் பக்தர்கள் அவதி!

காவிரி கரையில் கசாப்பு கடை: புனிதநீராடும் பக்தர்கள் அவதி!

மேட்டூர்: மேட்டூர் காவிரி கரையோரம் ஆடுகளை வெட்டி, கழிவுகளை தண்ணீரில் கொட்டுவதால், நீராடும் பக்தர்கள் பாதிக்கின்றனர். மேட்டூர் காவிரி கரையோரம் அணை முனியப்பன் கோவில் உள்ளது. பக்தர்கள் கோயிலில் ஆடு, கோழி வெட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். கோவிலில் ஆடுகள் வெட்டி, காவிரி கரையோரம் எடுத்து வந்து கம்பத்தில் தொங்க விட்டு அறுக்கின்றனர். அறுத்த ஆடு, கோழி கழிவுகளை அருகிலுள்ள காவிரியாற்றில் கொட்டி விடுகின்றனர். ஆடு, கோழி கழிவுகள் ரத்தம் நீரில் கலந்து வருவது, நீராடும் பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இறைச்சி கழிவுகள், குப்பைகள் காவிரி கரையோரம் குவிந்து முனியப்பன் கோவில் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆடு, கோழிகளை தனி இடத்தில் வெட்டி, கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும், குப்பைகள் காவிரி கரையோரம் கொட்டாமல் இருக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !