உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

திருச்செந்தூர் மாசித்திருவிழா 16ம் தேதி துவக்கம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா, கொடியேற்றத்துடன் 16ம் தேதி துவங்குகிறது. இதற்காக, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். அதிகாலை 5:30 மணிக்கு, கொடியேற்றப்படும். தினமும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, வீதிஉலா நடக்கிறது.ஏழாம் நாள் விழாவான பிப்., 22 ல், சண்முகர், உருகுசட்டசேவை, பிப்., 23 ல், சண்முகர் பச்சை சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், பிப்., 25 காலை நடக்கிறது. தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் (பொறுப்பு) ஜெயராமன், ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !