உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி ரங்கநாதபுரத்தில் சுதை சிற்பத்திற்கு கும்பாபிஷேகம்

வடவெட்டி ரங்கநாதபுரத்தில் சுதை சிற்பத்திற்கு கும்பாபிஷேகம்

செஞ்சி: வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம் மன் கோவிலில் விஸ்வரூப அங்காளபரமேஸ்வரி சுதை சிற்பத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம் வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் புதிதாக 24 அடி உயரத்தில் விஸ்வரூப அங்காளம்மன் சுதை சிற்பம் அமைத் துள்ளனர். இந்த அம்மனுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமம், பூர்ணாஹுதியும் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு கடம் புறப்பாடும் , 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் புண்ணியமூர்த்தி, ஊராட்சி தலைவர் பூங்காவனம், முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !