உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு யாகம்

ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு யாகம்

தூத்துக்குடி: ஆண்டு இறுதி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு யாகம் தூத்துக்குடியில் நடக்கிறது. தூத்துக்குடி பக்திபேரவை சார்பில் வருடந்தோறும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆண்டு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற வித்யா, யாகம் கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு நடத்தி வருகிறன்றனர். தூத்துக்குடி சிவன் கோயிலில் வரும் 17ம்தேதி காலை 6மணி முதல் 8மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்குகொள்ள இருக்கிறார்கள். பெருங்குளம் செங்கோல் மடம் ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் ஆசீர்வதித்து, விபூதியிட்டு யாகத்தில் பூஜிக்கப்பட்ட பேனாக்களை தேர்வு எழுதிட வழங்குகிறார். வித்யா யாகத்தை, சிவஸ்ரீ செல்வம் பட்டர் மற்றும் வேதவிற்பனர்கள் நடந்தி வருகின்றனர். படிப்பில் ஆன்மிகம் என்ற தலைப்பில் நல்லாசிரியை செல்வி பேசுகிறார். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் மாணவ, மாணவிகள் பெயர், பிறந்த நட்சத்திரம் எழுதி வாங்கப்பட்டு யாகத்தில் வைக்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !