உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாகம்

நாராயணி பீடத்தில் சரஸ்வதி யாகம்

வேலூர்: வேலூர் நாராயணி பீடத்தில், ஸ்ரீ சரஸ்வதி யாகம், வரும், 17ம் தேதி நடக்கிறது. வேலூர் திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சக்தி அம்மா நேற்று கூறியது: வேலூர் நாராயணி பீடம் சார்பில், தற்போது, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள், ஞானமும், பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற, நாராயணி பீடத்தில் சிறப்பு பூஜையாக, ஸ்ரீ மேதா சூக்த யாகம் எனப்படும் ஸ்ரீ சரஸ்வதி யாகம், வரும், 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, 10 மணிக்கு நடக்கிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் அனைத்து எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, சக்தி அம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட பேனா இலவசமாக வழங்கப்படும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் யாகத்தில் கலந்து கொண்டு, சக்தி அம்மாவின் அருளாசி பெற்று, தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று வெற்றி பெற அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு சக்தி அம்மா கூறினார். நாராயணி பீடம் மேலாளர் சம்பத், வேலூர் தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி மருத்துவனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் அறக்கட்டளை சௌந்தராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !