உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்ரவரி 22ல் மணியனூர் கோவில் கும்பாபிஷேகம்

பிப்ரவரி 22ல் மணியனூர் கோவில் கும்பாபிஷேகம்

சேலம்: சேலம் டவுன், மணியனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா, பிப்ரவரி, 22ம் தேதி நடக்கிறது. சேலம் டவுன், மணியனூரில் உள்ள அங்காளம்மன் நகர் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஸ்ரீ காளியம்மன் பேச்சியம்மன் ஆலய ஜீர்னோர்த்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா, ஃபிப்ரவரி, 20ம் தேதி காலை, 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று காலை, 10 மணிக்கு மஹா பூர்னாகுதியும், காலை, 11 மணிக்கு காவிரி நதியிலிருந்து புனித நீர் எடுத்து வருதல், மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிப்ரவரி, 21ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, விமான கலசம் வைத்தல், அங்காளம்மன் பிரதிஷ்டையும், ஃபிப்ரவரி, 22ம் தேதி காலை காலை, 10 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், மூலாலய கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, தசதானம், தச தரிசனம், மஹா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடைபெறுகிறது. அலங்காரபூசனம் அர்ச்சகர் சந்திரம், சுவாமிநாதன் குருக்கள், ஆலய வடிவமைப்பு சிற்பி கதிரேசன், நாதஸ்வர வித்வான் பழனிவேல் மற்றும் விழாக்கமிட்டியார் தலைமையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !